பயிற்சி
தன்னைத் தானே செதுக்கிக்கொண்ட தனித்துவமான தாரகைச் சிலை
கலை இலக்கிய படைப்பாளிகள் கல்விக்கூடங்களில் கற்பிக்கப்பட்டு உருவாக முடியுமா.கலைஞர்கள் புறச்சூழல்களால் நுட்பமாக உணர்வு வயப்படுபவர்களாக இருப்பார்கள் .புறநிலையில் இயங்கும் எல்லா அசைவுகளையும் தனது ஐம்புலன்களாலும் நுகரும் ஆற்றல் கலைஞர்கள் பெற்றிருப்பார்கள் .அந்த திறமையின் வீரியமும் அளவும் ஆளுக்கு ஆள் மாறுபடலாம் .கலைத்திறமை என்பது கற்பித்து வளர்வதைவிட உணர்ந்து உள்வாங்கி கலஞர்களாக மாறுபவர்களே ஆழமான திறமை படைத்தவர்களாக இருக்கிறார்கள்.
உலக இசைக்கு இலக்கணம் வகுத்த பீத்தோவன் என்ற இசைக்கலைஞர் காது கேட்கும் சக்தியில்லாதவர்.அவர் எப்படி இசையை கேட்டிருந்தார் எப்படி இசையின் ஒலிவடிவங்களை படைத்திருப்பார்.இசையை காதுகளால் கேட்பதுமட்டுமல்ல உடலின் ஐம்புலன்களாலும் அனுபவிக்க முடியும் என நிரூபித்தவர் அவர்.
இசையில் ஆர்வம் மிகுதியாக இருந்தும் அதை முறைப்படி கற்றுக்கொண்டு தன் திறமையை வெளிப்படுத்த ஆசைப்பட்டார் ஸ்ரீதேவி என்ற பெண் .அவரைப்பற்றி இங்கே கொஞ்சம் படிப்போம்.
இசைப்பள்ளியின் உள்ளே கூட இவரை சேர்க்கவில்லை எவரும் தனிப்பட்ட முறையிலும் இவருக்கு இசையை கற்றுத்தர விரும்பவில்லை.ஆனால் ஆழ்மனதில் அழுத்தமாக இருந்த இசையின் ஆர்வம் இந்தப்பெண்ணை ஆட்டிவைத்தது.
தன்னை ஏகலைவனாக நினவுபடுத்திக்கொண்டு இசை பயிற்சி தனக்கு தானே அளித்துக்கொண்டார்.பாடல்களை கூர்ந்து
கேட்பது அதனை பலமுறை எழுதிபடித்து மனப்பாடம் செய்வது என கடின முயற்சியாக மேற்கொண்டார். இந்தப்பயிற்சி அவருக்கு பாடல் எழுதும் திறமையை கூர்மைப்படுத்தியது.அவரே எழுதி மெட்டமைத்து பாடத்தொடங்கினார்.ஆனால் இவரது குரல் இவருக்கு ஒத்துழைக்கவில்லை.ஆண்மை கலந்த கட்டை குரலாகவே இருந்தது.
இவரை இசைப்பள்ளியில் சேர்க்காததற்கும், இவரது குரல் இவருக்கு ஒத்துழைக்காததற்கும் காரணம் இவர் ஒரு திருநங்கை.
இவரை தன் வளர்ப்பு மகளாக ஏற்று வளர்த்த திருநங்கை பிரியாபாபு இவருக்கு ஊக்கம் அளித்து தினமும் பாடவைத்தார்.பிரியாபாபு அளித் ஊக்கம் ஸ்ரீதேவியை மேலும் போராட வைத்தது. பலமுபறை பாடிப்பாடி இவரது குரல் மெருகேறியது.தொடர்ந்து தயக்கம் இன்றி பாடியதன்
விளைவு, பேசும்போது ஆண்மை கலந்த குரலாக இருந்தாலும் இவர்இசையில் கலந்து பாட ஆரம்பித்துவிட்டால் தேன்குரலாக மாறியது.
பல ஆண்டுகள் தனது அம்மா பிரியாபாபு தந்த ஊக்குவிப்பாலும் உள்ளுணர்வு உந்துதலாலும் இவரால் சிறப்பாக பயிற்சி பெறமுடிந்தது அதில் அவர் சாதனையும் புரிந்தார். .அவர் தன்முயற்சியின் பலனாக தன்னை தானே சைதுக்கிக்கொண்ட சிற்பியாக ஆனார் .
ஸ்ரீதேவியையும் பிரியாபாபு அவர்களையும் என்வீட்டில அமர்த்தி என் மனைவி நிர்மலா ஆர்வத்தோடு பல கேள்விகளை கேட்டு பாடவும் வைத்தார்.
கலைப்படைப்பாளியாக வேண்டும்
என திரைத்துறையில் பயிற்சி பெற விரும்புகிறவர்கள்.திரைக்கதை எழுதுவது எப்படி? கேமரா ஆங்கிள், ஷாட், சீன் ,சீக்குவன்ஸ், நடிப்பு ,ஒலிப்பதிவு, எடிட்டிங் என திரைப்படத்தின் தொழில் நுட்பங்களை கற்றுகொள்வதால் மட்டுமே நாம் படைப்பாளி ஆகி விட முடியாது.நம்மைச் சுற்றிலும் நடமாடுகின்ற மனிதர்கள் அனைவரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களாக பார்க்கவும் புத்தகமாக அவர்களை படிக்கவும் தெரிய வேண்டும்.
ஒரு இரயில் நிலைய மேம்பாலத்தின் நின்றுகொண்டு அங்கே உள்ள மனிதர்களின் நடவடிக்கைகளையும், அவர்களின் செய்கைகளுக்குள் உள்ள குணச்சித்திரத்தையும் அகக்கண்களால் உணர்ந்து பாருங்கள். அந்த கூட்டத்தில் அனைவருக்கும் உள்ள ஒரு ஒருமித்த உணர்வோட்டம் பொதுவாக இருப்பதை அடையாளம் காணுங்கள். அந்த பொதுவான ஓட்டத்தை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களாக சிலரை மட்டும் அவர்களிடமிருந்து தேர்வு செய்துகொண்டு அவர்கள் என்ன செய்கின்றார்கள்,எப்படி உடல் அசைவை ஏற்படுத்துகிறார்கள்
என மனதில் உள்வாங்கி பதிந்து கொள்ளுங்கள். அவற்றை கோர்வைப்படுத்தி திரைக் கதை வடிவில் அந்த சம்பவங்களை புனைந்து வடிவமைக்க வேண்டும்.அவ்வாறு நம்மை சுற்றிலும் நிகழுகின்ற இயக்கங்களிலிருந்த
உணர்வுகளையும் செய்கைகளையும் கொர்த்து திரைக்கதை படைக்க முயலவேண்டும்.தொடர்ந்து இப்படிப்பட்ட
முயற்சியில் ஈடுபட்டு பயிற்சி பெறும் போது நம்மை நாமே செதுக்கிக்கொள்ளும் சிற்பியாக
ஆக முடியும்.நாம் ஒரு புதுமையான படைப்பாளியாக உருவாக முடியும்.
உண்மையில், சமுதாயத்தில் நடக்கும் சம்பவங்களும் மனிதர்கள்படும் அவதிகள் ஆனந்தங்கள்
போராட்டங்களை காட்சி வடிவில் சித்தரிக்கும் வகையில் திரைக்கதைகளை உரவாக்க வேண்டும .சிறுகதைகள் நாவல்கள் ஆகியவற்றை படித்து அதை திரப்படமாக ஆக்குவதைவிட நமது ஊரில். நடந்த உண்மைசம்பவத்தைஅந்த மக்கள் பேசும் சொல் உச்சரிப்பிலிருந்து கோபத்தையும மகிழச்சியையும் வீரத்தையும் வெளிப்படுத்தும் உடல் மொழியில் திரைக்கதைகள் உருவாக்கப்பட வேண்டும்.
இப்படி எடுக்கும் படங்களே திரைப்பட விழாக்களில் விருது பெருகின்றன.
அறிந்தவற்றில் சிலவற்றை எழுதுகிறேன்
கோவை.சுரேந்திரபாபு.செல்பேசி 9444468670
இப்படி எடுக்கும் படங்களே திரைப்பட விழாக்களில் விருது பெருகின்றன.
அறிந்தவற்றில் சிலவற்றை எழுதுகிறேன்
கோவை.சுரேந்திரபாபு.செல்பேசி 9444468670