முப்பரிமாண கோணம் என்பது படத்தை பதிவு செய்வது எல்லாமே இருபரிமாண படமாகத்தான் நாம் பதிவு செய்கிறோம்.நீளம் அகலம் மட்டுமே நமது படத்தில் இருக்க முடியும் 3டி எனப்படும்
முப்பரிமாண படம் எடுக்கும் கேமராவில் மட்டுமே நீளம் அகலம் மற்றும் பருமன் அல்லது ஆழம்
என்ற மூன்று பரிமாண தோற்றத்தை காட்ட முடியும்.
ந்மது நடைமுறையில் உள்ள கேமராவில் எப்படி முப்பரிமாணத்தை நாம் காட்டுவது.?
ஒரு கட்டிடத்தை படமாக்கும் போது நேர்நிலையில் கேமராவை வைத்து படமாக்கினால் கட்டடத்தின் உயரம் அகலம் மட்டும் நம்மால் படத்தில் பதிவு செய்து காட்ட முடியும் அல்லது
பார்க்க முடியும்.கட்ட்டத்தினு பக்கவாட்டு சுவரை காட்டினால் கட்டித்தின் உயர் அகலம் மற்றும்
கட்டடத்தின் பருமன் தெரியும்.அதன்முப்பரிமாண தோற்றம் தெரிய கட்ட்டத்தை நேர்கோணத்தில் பதிவு செய்யாமல் சற்று இடது பக்கமாகவோ அல்லது வலது பக்கமாகவோ சுமார் 45 டிகிரி கோணத்திலிருந்து கேமராவை தள்ளி வைத்து பதிவு செய்தால் கட்ட்டத்தின் முன்பக்க அகலம்,உயரம் மற்றும் பக்கவாட்டில் உள்ள சுவர் பரப்பு படத்தில் பதிவாகும் போது முப்பரிமாண தோற்றத்தை நாம் உணரமுடியும்.
கேமராரை உயரமான இடத்திலிருந்து ஒரு கட்ட்டத்தை படமாக்கினால் கட்டடத்தின் மேல்தளத்தின் நீளம் அகலம் மற்றும் கட்டடத்தின் உயரம் பதிவு ஆகி முப்பரிமாண தோற்றத்தை காட்டும்.
ஒரு மனிதனின் முகத்தை நேருக்குநேராக படமாக்காமல் சற்று இடது பக்கமாவோ அல்லது வலது பக்கமாகவோ நகர்ந்து கேமராவை இயக்கினால் முகத்தின் பக்க தோற்றமும் (கன்னம் காதுபகுதி) முகத்தின் முன் தொற்றமும் தெரியும்.
கேமராவை சற்று கீழாக இறக்கி மேல்நோக்கிய கோணத்தில் அதே முகத்தினை பதிவு செய்து பார்த்தால் முகத்தின் பக்க வாட்டு தோற்றம் முன்பக்கதொற்றம் அத்துடன் தாடையின் கீழ் பகுதியும் படத்தில் தெரிந்து முகத்தின் முப்பரிமாண தொற்றத்தை காணவைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக